ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் (Alexei Navalny)
தாயார் தனது மகனின் உடலை விடுவிக்குமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதன்படி சமூக ஊடகங்களில் காணொளி ஒன்றை வெளியிட்டு அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்
இன்னிலையில் அலெக்ஸி நவல்னி கடந்த வெள்ளிக்கிழமை அந்நாட்டில் உள்ள சிறைச்சாலையில் உயிரிழந்தார், அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும் இறுதிச் சடங்குகளை கண்ணியமாகவும் மனிதாபிமானத்துடனும் மேற்கொள்ளும் வகையில் தனது மகனின் உடலை விடுவிக்குமாறு நவல்னியின் தாயார் ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் பூட்டிடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், இது தொடர்பான ரஷ்ய ஜனாதிபதி இதுவரை பதிலளிக்கவில்லை எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.