• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சில அரசியல்வாதிகளுக்கு ஜீவன் மீது காழ்ப்புணர்ச்சி : பாரத் அருள்சாமி கண்டன அறிக்கை!

சில அரசியல்வாதிகளுக்கு ஜீவன் மீது காழ்ப்புணர்ச்சி : பாரத் அருள்சாமி கண்டன அறிக்கை!

Kavipriya S by Kavipriya S
2024/02/22
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜீவன் தொண்டமானுக்கு எதிராக நேற்யைதினம் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் சபையில் முன்வைத்த கருத்துக்கு பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் பாரத் அருள்சாமி கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதற்கமைய , ஒரு இளம் அரசியல் தலைவராக மக்களுக்கான அரசியலை வெற்றிகரமாக முன்னெடுத்து, மக்களின் கோரிக்கைகளை அமைச்சர் ஜீவன் தொண்டமான் நிறைவேற்றி வருவதால், அரசியலில் தாம் காணாமல் போய்விடுவோம் என்ற பீதியிலேயே அவர் மீது சில எதிரணி மலையக அரசியல்வாதிகள் விமர்சனக் கணைகளைத் தொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

இது காழ்ப்புணர்ச்சி – வங்குரோத்து அரசியலின் வெளிப்பாடாகும் – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

வீட்டுரிமையையும், காணி உரிமையையும் வைத்து இதுவரை அரசியல் நடத்தி வந்தவர்கள், இவ்விரண்டு உரிமைகளையும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் பெற்றுக்கொடுத்துவிட்டால், தாம் அரசியலில் அநாதையாகிவிடுவோம் என்ற அச்சம் அவர்களை ஆட்கொள்ள தொடங்கியுள்ளது. அதனால்தான் புலம்ப ஆரம்பித்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு 10 பேர்ச்சஸ் காணி வழங்குவதற்கு சட்டப்பூர்வமாக அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது, ஆக 7 பேர்ச்சஸா அல்லது 10 பேர்ச்சஸா என கோமாளி அரசியல்வாதிகள் குழப்பமடைய தேவையில்லை.

அதேபோல அவர்களின் ஆட்சிகாலத்தில் வழங்கப்பட்டதுபோல் காட்போல் உரித்து அல்ல, சட்டப்பூர்வமான காணி உரித்து பத்திரமே வழங்கப்படவுள்ளது எனவும் பாரத் அருள்சாமி சுட்டிக்காட்டியுள்ளார்.

“ விசேட அமைச்சரவை அனுமதியுடன் 10 பேர்ச்சஸ் வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, 10 பேர்ச்சஸ் காணியுடன்தான் எமது மக்களுக்கு வீடுகள் வழங்கப்படும். பயனாளிகள் தேர்வும் முறையாகவே இடம்பெறும். இதனை இந்தியாவும், சம்பந்தப்பட்ட நிறுவனமும் மேற்பார்வை செய்யும்.

இதற்கு நாம் முழு ஆதரவு வழங்குவோம். தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு மட்டும் அல்ல, தோட்டத்தில் பிறந்திருந்தாலேயே வீடுதான். தோட்டத்தில் 5 வருடங்கள் வாழ்ந்திருந்தால் வீட்டை பெறுவதற்கு அவர் தகுதியுடையவராவார்.

கடந்த ஆட்சியின்போதே கட்சி பார்த்து வீடுகள் வழங்கப்பட்டன. இதன்போது புறக்கணிக்கப்பட்ட – பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நாம் முன்னுரிமை வழங்கியுள்ளோம். கட்டி முடிக்கப்படும் வீடுகள் காணி உரிமையுடன்தான் கையளிக்கப்படும். கடந்த காலங்களில் போன்று கண்டி உட்பட சில மாவட்டங்களில் வழங்கப்பட்டதுபோல் காட்போட் காணி வழங்கப்படமாட்டாது.

கண்டி, ஹந்தானை பகுதியில் எவ்வித அடிப்படை வசதியும் இன்றியே வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன. எதிரணி மலையக அரசியல்வாதிகள் சொன்னாலும், சொல்லாவிட்டாலும்கூட ஹந்தானை பகுதியில் உள்ள அரச காணியை நாம் மக்களுக்கு பிரித்துகொடுக்கத்தான் போகின்றோம்.

காணி உரிமையையும், வீட்டுரிமையையும் வைத்து அரசியல் நாடகம் நடத்தி வந்தவர்கள், இவற்றுக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் செயல் வடிவம் கொடுத்து வருவதால் நடுங்கியுள்ளனர். கடந்த அரசின் இரு அமைச்சுகளையும், இராஜாங்க அமைச்சு பதவிகளையும் வைத்து செய்ய முடியாவற்றை தனி ஒருவனாக ஜீவன் செய்து காட்டியுள்ளதால் வன்மத்தை அவர்மீது வெளிப்படுத்த முற்படுகின்றனர்.

காலையில் எதிரணியிலும் இரவில் அரச தரப்புடனும் டீல் அரசியல் நடத்தும் இவர்களை விமர்சிப்பதுகூட எமக்கு இழுக்குதான். இருந்தாலும் சமூகத்தின் போலி கருத்துகளை விதைத்து மக்களை குழப்பக்கூடாது. அதனால்தான் இந்த தெளிவுபடுத்தல்” என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகள் தொடர்பில் அறிவிப்பு!

Next Post

சர்வதேச சந்தையில் மசகு எண்ணையின் விலை அதிகரிப்பு!

Related Posts

சவுதி எண்ணெய் வழித்தடம் ஆபத்தில்; உலக சந்தையில் அதிர்ச்சி அலை
ஆசிரியர் தெரிவு

சவுதி எண்ணெய் வழித்தடம் ஆபத்தில்; உலக சந்தையில் அதிர்ச்சி அலை

2026-09-15
விமான நிலையத்தில் கைவிடப்பட்ட 32 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு! 
இலங்கை

விமான நிலையத்தில் கைவிடப்பட்ட 32 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு! 

2026-09-15
திடீர் சுற்றிவளைப்பில் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது!
இலங்கை

களுபோவில அவிஷ்கவின் போதைப்பொருள் வலையமைப்பு நடத்துனர் கைது!

2026-09-15
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை!
இலங்கை

கூர்மையான ஆயுதங்களினால் தாக்கப்பட்ட சம்பவங்களில் இருவர் உயிரிழப்பு!

2026-09-15
நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. மழைக்கான சாத்தியம்!
ஆசிரியர் தெரிவு

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. மழைக்கான சாத்தியம்!

2026-09-15
மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு  அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!
இலங்கை

மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

2026-09-14
Next Post
சர்வதேச சந்தையில் மசகு எண்ணையின் விலை அதிகரிப்பு!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணையின் விலை அதிகரிப்பு!

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்பான புதிய அறிவிப்பு!

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்பான புதிய அறிவிப்பு!

சமூக நீதியே பாஜகவின் உறுதியான நிலைப்பாடு என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மார்ச்சில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் கூட்டம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
சவுதி எண்ணெய் வழித்தடம் ஆபத்தில்; உலக சந்தையில் அதிர்ச்சி அலை

சவுதி எண்ணெய் வழித்தடம் ஆபத்தில்; உலக சந்தையில் அதிர்ச்சி அலை

0
விமான நிலையத்தில் கைவிடப்பட்ட 32 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு! 

விமான நிலையத்தில் கைவிடப்பட்ட 32 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு! 

0
திடீர் சுற்றிவளைப்பில் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது!

களுபோவில அவிஷ்கவின் போதைப்பொருள் வலையமைப்பு நடத்துனர் கைது!

0
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை!

கூர்மையான ஆயுதங்களினால் தாக்கப்பட்ட சம்பவங்களில் இருவர் உயிரிழப்பு!

0
நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. மழைக்கான சாத்தியம்!

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. மழைக்கான சாத்தியம்!

0
சவுதி எண்ணெய் வழித்தடம் ஆபத்தில்; உலக சந்தையில் அதிர்ச்சி அலை

சவுதி எண்ணெய் வழித்தடம் ஆபத்தில்; உலக சந்தையில் அதிர்ச்சி அலை

2026-09-15
விமான நிலையத்தில் கைவிடப்பட்ட 32 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு! 

விமான நிலையத்தில் கைவிடப்பட்ட 32 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு! 

2026-09-15
திடீர் சுற்றிவளைப்பில் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது!

களுபோவில அவிஷ்கவின் போதைப்பொருள் வலையமைப்பு நடத்துனர் கைது!

2026-09-15
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை!

கூர்மையான ஆயுதங்களினால் தாக்கப்பட்ட சம்பவங்களில் இருவர் உயிரிழப்பு!

2026-09-15
நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. மழைக்கான சாத்தியம்!

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. மழைக்கான சாத்தியம்!

2026-09-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.