”நாட்டில் வெப்பநிலை மற்றும் வறட்சி அதிகரித்து வரும் நிலையில், நாட்டு மக்களிடையே நீர் நுகர்வு அதிகளவில் இடம்பெற்றுவருவதாக” தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அனோஜா களு ஆராச்சி தெரிவித்துள்ளார்.
இதேவேளை தற்போதைய நிலைமை காரணமாக நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கான முக்கியமான நீர் ஆதாரமான களனி ஆற்றின் நீர் மட்டம் குறைந்து வருகிறமையும் குறிப்பிடத்தக்கது