இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 19 மீனவர்களில் 18 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு ஒருவருக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 7 ஆம் திகதி எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குறித்த 19 மீனவர்களும் , இரண்டு படகுகளுடன் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.