பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பிரேசில் கால்பந்து வீரர் டானி ஆல்வ்ஸ்விற்கு 4 1/2 ஆண்டுகள் சிறையில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 2022 ஆம் ஆண்டு பார்சிலோனாவில் உள்ள இரவு விடுதியில் பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக அல்வ்ஸ் மீது குற்றம் சாட்டப்பட்டு தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாதிக்கப்பட்டவருக்கு $163,000 இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.