செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் விசேட கவனம் செலுத்தப்படுமென ஜனாதிபதி ரணில் விக்கிரம தெரிவித்துள்ளார்.
இரத்மலானை லலித் அத்துலத்முதலி தொழில் பயிற்சி நிலையத்திற்கு மேற்பார்வை விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, அங்குள்ள மாணவர்களை சந்தித்துக் கலந்துரையாடிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” தற்போது டிஜிட்டல் மாற்றத்திற்கான முன்னெடுப்புக்கள் துரிதமாக இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகள் குறித்து விசேட கவனம் செலுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டு மக்களும் நாளாந்தம் மாற்றமடையும் தொழில்நுட்பத்துடன் முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதே நாட்டின் எதிர்பார்ப்பாகும்”இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
லலித் அத்துலத்முதலியின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள தொழில் பயிற்சி நிலையத்தில் மோட்டார் இயந்திரவியல், தகவல் தொழில்நுட்பம், முப்பரிமாண வடிவமைப்பு, பாலர் பாடசாலை ஆசிரியர் பாடநெறி, நவீன தொழில்நுட்பப் பாடநெறி, அழகுக்கலை நிபுணர் பாடநெறி, மொழிப் பாடநெறிகள் உட்பட நவீன உலகிற்கு தேவையான பல்வேறு பாடநெறிகள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.