ரஷ்யாவின் மீது மேலும் பல பொருளாதார தடைகளை அமெரிக்கா விதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த நடவடிக்கையானது ஏனைய கூட்டணி நாடுகளுடன் இணைந்து மேற்கொள்ளப்படவுள்ளதாக
திறைசேரியின் பிரதித் தலைவர் வொலி அடேஜிமோ ரொயிட்டஸ் தெரிவித்தார்
அதன்படி ரஷ்ய இராணுவ உற்பத்தி தொழிற்துறை மற்றும் வேறுநாடுகளில் அமையப்பெற்றுள்ள உற்பத்தி தொழிற்சாலைகளை இலக்கு வைத்து சுமார் 500 மேற்பட்ட விடயங்களுக்கு தடைவிக்கவுள்ளது
மேலும் எதிர்கட்சித் தலைவர் அலக்சி நவல்னியின் மரணத்திற்கு ஜனாதிபதி புட்டின் பொறுப்பு ஏற்க வேண்டும் எனவும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.