இந்த நாட்டின் பொருளாதார செழுமைக்காக அமெரிக்க உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும் என அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் வர்மா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் வர்மா உள்ளிட்ட குழுவினர் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை இச்சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து, துணை இராஜாங்க செயலாளர் உள்ளிட்ட குழுவினர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
அத்துடன், இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அமெரிக்கா வழங்கிய மனிதாபிமான மற்றும் அவசர உதவிகளை அமைச்சர் அலி சப்ரி பாராட்டியிருந்தார்.
மேலும் பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் ஆர்.வர்மா இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.