கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளதாக குடும்ப சுகாதார பணியக அதிகாரி வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அதிகளவான எடை குறைந்த மற்றும், உடல் ஊனமுற்ற சிறுவர்கள் பதிவாகியுள்ளனர்.
அத்துடன் ஹம்பாந்தோட்டை உட்பட நாடளாவிய ரீதியில் இவ்வாறானதொரு நிலை காணப்படுவதாக அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தாலும் எவரும் அதனை கருத்திற்கொள்ளவில்லை.
மேலும் குடும்ப சுகாதார பணியகத்தின் அறிக்கைகளின்படி, 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டின் இறுதியில், குழந்தைகளின் உயரம் மற்றும் எடை குறைவு போன்ற ஊட்டச்சத்து நெருக்கடிகள் நாடு முழுவதும் காணப்படுகின்றன” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.