அம்பாறை மாவட்டத்துக்கு 1000 க்கும் மேற்பட்ட யானைகள் வருகை தருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாண்மை அறுவடையின் பின்னர் புதிதாக முளைக்கின்ற புல் இனங்களை உண்பதற்காகவே இவ்வாறு யானைகள் கூட்டம் கூட்டமாகப் படையெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இன்று காலை திடிரென வளத்தாப்பிட்டி வில்லுக்குளப் பகுதிகளை ஊடறுத்து அறுவடை செய்யப்பட்ட வயல் நிலங்களை நோக்கி 100 க்கும் அதிகமான யானைகள் வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இவ்வாறு வருகை தரும் யானைகள் தமது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.