நாட்டில் இன்று இரு வேறு இடங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அண்மைய நாட்களில் தொடர்ச்சியாக இவ்வாறான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
அஹங்கல்ல பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
41 வயதுடைய நீல் குசும் குமார என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இரண்டு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் விளைவாகவே இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
















