இதன்படி எதிர்வரும் 5 இ 6 மற்றும் 7 ஆகிய திகதிகளில் நாடாளுமன்றம் கூடவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது
அத்துடன் எதிர்வரும் 8 ஆம் திகதி பொதுவிடுமுறை என்பதனால் அன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வு இடம்பெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
எதிர்வரும் 5 ஆம் திகதி காலை 9.30 முதல் 10 .30 வரை வாய்மூல விடைக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அன்றைய தினம் ஆளுங்கட்சியினரால் கொண்டவரப்படவுள்ள பிரேரணையின் பிரகாரம் சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் இடம்பெறவுள்ளது
மேலும் எதிர்வரும்6 ஆம் திகதி காலை 10.00 மணிமுதல் 10.30 வரை பிரதமருடனான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது
அத்துடன் அன்றைய தினம் எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள பிரேரணையின் பிரகாரம் சபை ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறவுள்ளது
இதேவேளை ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினர் இணைந்து முன்வைக்கவுள்ள வனவிலங்குகளால் ஏற்படும் பயிர்சேதம் தொடர்பான சபை ஒத்திவைப்ப விவாதமும் இடம்பெறவுள்ளது