தி.மு.க அரசை க் கண்டித்து அ.தி.மு.கவைச் சேர்ந்தோரால் பாரிய போராட்டங்கள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும், போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதாகவும் தெரிவித்தே குறித்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களிலும் குறித்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இப்போராட்டங்களில் அ.தி.மு.கவின் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டு தமது எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றனர்.