குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கான தேர்தலில் நிக்கி ஹாலே (Nikki Haley) வோஷிங்டனில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
வரும் நவம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் குடியரசுக் கட்சி சார்பாக போட்டியிடவுள்ள வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் தற்போது இடம்பெற்று வருகின்றது.
இப்போட்டியில் டொனால்ட் ட்ரம்பிற்கும், நிக்கி ஹாலே ஆகியோருக்கு இடையில் நேரடி போட்டி நிலவி வருகின்றது. ஏற்கனவே ஜனாதிபதியாக இருந்த டொனால்ட் ட்ரம்பிற்கு ஆதரவு அதிகமாக இருந்த போதிலும், நிக்கி ஹாலேவும் தனது பிரசாரத்தை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றார்.
இந்நிலையில் வோஷிங்டனில் நேற்று நடந்த தேர்தலில் நிக்கி ஹாலே 63% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்று தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
இதேவேளை தொடர்ந்து வெற்றிபெற்று வந்த டொனால்ட் ட்ரம்பிற்கு இது முதல் தோல்வியாக அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.