நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்தும் அதிகரித்து காணப்படுவதனால் மிகவும் அவதானத்துடன் செயல்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், வடமேல், தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அனுராதபுரம், மன்னார், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் வெப்பநிலை தொடர்ந்தும் அதிகரித்து வண்ணம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த பகுதிகளில் பணிபுரியும் நபர்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், நிழலான பகுதிகளில் முடிந்தவரை ஓய்வெடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.
முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களை வீட்டில் வைத்து கவனித்துக் கொள்ளுமாறும், சிறு குழந்தைகள் தொடர்பிலும் அவதானத்துடன் செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.