காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனை மீது இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பின் மூத்த செயற்பாட்டாளர்கள் குறித்த மருத்துவமனையில் பதுங்கியிருந்து சதித்திட்டம் தீட்டுவதாக உளவுத்துறைத் துறைக்குக் கிடைத்த தகவலையடுத்து இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
அத்துடன் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு மருத்துவ வசதிகளை பயன்படுத்துவதை ஒருபோதும் ஏற்கமுடியாது என்றும் இஸ்ரேல் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த வைத்திய சாலையில் 30,000க்கும் மேற்பட்ட மக்கள் சிக்கியுள்ள நிலையில் அவர்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இது வரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.