அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் உயிரிழந்துள்ளார்.
அமெரிக்காவில் போஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பாடப்பிரிவில் கல்வி பயின்று வந்த 20 வயதுடைய இந்திய மாணவர் ஒருவரே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், இவ்வாண்டில் மட்டும் அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த, 20 வயதுடைய அபிஜீத் பருச்சுரு அமெரிக்காவிலுள்ள காட்டுப் பகுதியிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த மாணவனான அபிஜீத்தின் உடல், குண்டூரில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.
இதற்கு முன்பாக கோல்கட்டாவை சேர்ந்த நடனக் கலைஞர் அமர்நாத் கோஷ் என்பவர் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அதன்படி, அமெரிக்காவில் இவ்வாண்டில் இதுவரையான காலப்பகுதியில் இந்தியாவை சேர்ந்த9 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, வொஷிங்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், அமெரிக்கா முழுவதும் உள்ள இந்திய மாணவர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தி வருதுடன், மாணவர்களுக்கு தேவையான அறிவுரைகளையும் வழங்கி வருகின்றனர்.















