இலங்கை இருபதுக்கு 20 கிரிக்கெட் அணித் தலைவர் வனிந்து ஹசரங்கவிற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை போட்டித்தடை விதித்துள்ளது.
பங்களாதேஷ் அணியுடன் இடம்பெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் போது கிரிக்கெட் பேரவையின் ஒழுக்கவிதிகளை மீறியமைக்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, பங்களாதே{க்கு எதிரான டெஸ்ட் தொடரின் 2 போட்டிகளுக்கும் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வனிந்து ஹசரங்கவிற்கு போட்டிக் கட்டணத்தில் 50 வீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன் 3 தண்டனை புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் கடந்த 24 மாதங்களில் வனிந்துவிற்கு 8 தண்டனைப் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.