அரசாங்கத்திற்கு எதிராகத்தான் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவந்திருக்க வேண்டும்” என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் முதல் விவாதத்தின் போதே நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ ,இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது“ இணைய பாதுகாப்பு சட்டமூலம் தான் உலகத்திலேயே மிகவும் மோசமான சட்டமூலம் என வைத்துக் கொள்வோம். ஆனால், சபாநாயகருக்கு இதுதொடர்பாக பேசவோ அல்லது திருத்தங்களையோ செய்யத்தான் முடியுமா? அல்லது சட்டமூலத்தை அவரால் நிராகரிக்கதான் முடியுமா?
இணைய பாதுகாப்புச் சட்டம் கொண்டுவந்தது தவறு எனில், அரசாங்கம்தான் அந்தத் தவறை செய்துள்ளது. எனவே, அரசாங்கத்திற்கு எதிராகத்தான் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவந்திருக்க வேண்டும். இந்த விடயத்தில் சபாநாயகரை குற்றஞ்சாட்ட முடியாது. பெரும்பான்மையானவர்கள் எடுத்த முடிவை சபாநாயகர் அங்கீகரித்தே ஆகவேண்டும்.
இதுதான் அவருக்கான தத்துவம். எதிர்க்கட்சிக்கு வழங்கப்பட்டுள்ள தவறான ஆலோசனையின் பேரிலேயே இந்தப் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.