”வவுனியா – வெடுக்குநாரி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில், அத்துமீறிய செயற்பாடுகள் தொடருமாக இருந்தால், மீண்டும் அங்கு கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர், குறித்த பிரதேசத்தில் ஆலயமொன்றே கிடையாது என்றும் சபையில் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பொலிஸார் செயற்பட்டமை எவ்வாறு தவறான விடயமோ, அதேபோன்று, இந்த விடயத்தை தங்களின் அரசியலுக்காக சில கட்சிகள் பயன்படுத்துவதும் ஏற்றுக் கொள்ள முடியாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.