நாட்டில் மக்களிடையே தோல் நோய்கள் பரவும் நிலை அதிகமாக ஏற்பட்டுள்ளதாக தோல் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்
அதன்படி இந்த நிலை தற்போது தொற்று நோயாக மாறியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
“டினியா” எனப்படும் இந்த தோல் நோய் வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் பரவும் என மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றதுடன் வியர்வை அதிகம் தேங்கும் இடங்களைச் சுற்றியும், தலையைச் சுற்றியும் இந்த நோய் பரவுகிறது எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது செல்லப்பிராணிகள் மூலம் பரவும் என மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.