இறக்குமதி செய்யப்படும் ரின் மீன்களுக்கு 550 ரூபாவுக்கு இணையான வரி விதிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு விரைவில் அங்கீகாரம் வழங்குமாறு ரின் மீன் உற்பத்தியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஜனவரி மாதத்தில் இறக்குமதி செய்யப்படும் ரின் மீன்களுக்கான வரியை அதிகரிக்குமாறு தமது தொழிற்சங்கம் விடுத்த கோரிக்கைக்கு நல்ல பதில் கிடைத்திருந்தால் அரசாங்கத்திற்கு 262 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்திருக்க முடியும் என குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது
அதன்படி பெப்ரவரி மாதம் இருபத்து இலட்சத்து ஐம்பத்தைந்தாயிரம் (2,055,000) மீன் ரின்கள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டதாகவும் அமைச்சரவை ஆவணத்தின் அனுமதி தாமதமானால் மேலும் ரின் மீன்கள் நாட்டிற்கு வரக்கூடும் என்றும் ரின் மீன் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் திருகோணமலை கடற்பரப்பில் மீன்கள் முறையற்ற விதத்தில் பிடிக்கப்படுவதனால் அங்குள்ள மீன்கள் அழிந்து வருவதாகவும், இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதால் அமைச்சு மற்றும் மீனவளத்துறையினர் தலையிட்டு இவற்றிற்கு முறையான வேலைத்திட்டம் ஒன்றினைத் தயாரிக்க வேண்டும் என சங்கத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டுத் தேவைக்குத் தேவையான மீன் மற்றும் டின் மீன்களை இந்நாட்டில் இருந்து பெற்றுக் கொள்ள முடிகின்ற போதிலும் இதுவரை எந்தவொரு அரசாங்கத்தினாலும் முறையான முறைமையினை நடைமுறைப்படுத்தாமை வருத்தமளிப்பதாக தகர மீன் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளன
மேலும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ ஆகியோர் இணைந்து ரின்மீனுக்கு வரி விதிக்கும் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளதுடன், அது நிறைவேற்றப்படும் வரை ரின் மீன் இறக்குமதியை நிறுத்துமாறும் குறிப்பிட்டுள்ளது.