பண்டிகை காலத்தை முன்னிட்டு வர்த்தக நிலையங்களை பரிசோதிப்பதற்காக நாடளாவிய ரீதியில் 3000 பொது சுகாதார பரிசோதகர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இந்த சோதனைகளின் போது, பண்டிகைக் காலத்திற்காக தயாரிக்கப்பட்ட பல உணவு மாதிரிகளை பரிசோதகர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக அதன் தலைவர் .உபுல் ரோஹன தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் தெரிவிக்கையில் பொதுமக்கள் பண்டிகைக் காலத்துக்கான உணவுகளை வாங்க வரும்போது, அவர்களுக்கு உணவு தயாரிக்கக் கொடுக்கப்படும் பொருட்கள், பண்டிகைக் காலத்துக்காக விளைவிக்கப்படும் உணவு வகைகள், பழங்கள் போன்றவற்றைச் சரிபார்ப்போம். என்றும் அதை ஆய்வாளர்களுக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் உணவு உற்பத்தி நிலையங்களில் உணவு தயாரிக்கும் நபர்களின் மருத்துவ பதிவுகளை பெற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.