பொதுஜன பெரமுனவில் தற்போது வரையில் நான்கு அல்லது ஐந்து ஜனாதிபதி வேட்பாளர்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஒரு பிரதேச சபைக்கு கூட வேட்பாளர்களை காண முடியாது என்று கூறிய கட்சி இன்று பல ஜனாதிபதி வேட்பாளர்களைக் கொண்டுள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இதன்படி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறும் பொது வேட்பாளரை முன்வைக்க தாம் தயாராக இருப்பதாகவும் அந்த வேட்பாளர் யார் என்பதை கட்சி இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.