லஹிரு வீரசேகர, துமிந்த நாகமுவ மற்றும் ரத்கரவ்வே ஜினரதன தேரர் ஆகியோரை பிணையில் விடுதலை செய்வதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த 20 ஆம் திகதி மக்கள் போராட்ட இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது குறித்த மூவரும் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
அதன்படி, அன்றிலிருந்து இன்றுவரை குறித்த மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பிணையில் செல்ல விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.