நாட்டில் கலால் உரிமம் வழங்கும் செயற்பாட்டினை இதுவரையில் அரசாங்கம் நிறுத்தவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இது குறித்து நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளதாவது” நாங்கள் முறையாகவே இந்த கலால் உரிமங்களை வழங்குகிறோம். நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட விதிகளின் அடிப்படையில் யாராவது உரிமம் கோரினால், முதலில் அது தொடர்பில் கவனம் செலுத்தப்படும்.
ஆனால் இவ்வாறு உரிமம் கோரும்போது குறித்த பிரதேசத்திலுள்ள மக்களின் எதிர்ப்பு, சிவில் அமைப்புகளின் எதிர்ப்பு என்பன கருத்தில் கொள்ளப்படும். இவ்வாறான சம்பவங்களை கலால் திணைக்களம் எனது கவனத்திற்கு கொண்டு வந்திருந்தது. அங்கீகரிக்கப்பட்ட விதிகளின் அடிப்படையில்தான் உரிமம் வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கூறியதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
நாங்கள் கலால் உரிமம் வழங்கும் செயற்பாட்டினை நிறுத்தவில்லை. விதிகளை அதிகமாக அமுல்படுத்தச் சொல்லியிருப்பது மிகவும் நல்லது. நாங்கள் ஏற்கனவே அதைப் பின்பற்றி வருகின்றோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.