”பொதுத் தேர்தலை முதலில் நடத்துவதாயின் ஜனாதிபதி, நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும்” நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஜனாதிபதி தேர்தலையும் பொதுத்தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்துவது தொடர்பில் அரசாங்கத்தினால் தீர்மானம் மேற்கொள்ளமுடியாது. தேர்தலை நடத்துவது தொடர்பான அனைத்து அதிகாரங்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கே வழங்கப்பட்டுள்ளன. மாறாக அரசாங்கத்திற்கு அல்ல.
நாடாளுமன்ற தேர்தலை முதலில் நடத்துவதாயின் ஜனாதிபதி முதலில் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும்.அவ்வாறு இல்லாவிடின் நாடாளுமன்றத்தை கலைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து கையொப்பமிடப்பட்ட யோசனை திட்டம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.