”எதிர்வரும் ஜனாதிபதிதேர்தலில் தற்போதைய ஜனாதிபதி வரலாற்று வெற்றியை பதிவு செய்வார்” என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனியொருவராக இந்த நாட்டை பொறுப்பேற்று இந்த நாட்டை அபிவிருத்திபாதைக்கு இட்டுச் சென்றுள்ளார்.
ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களை மக்கள் நன்கு அறிந்துள்ளனர் எனவே எதிர்வரும் ஜனாதிபதிதேர்தலில் தற்போதைய ஜனாதிபதி வரலாற்று வெற்றியை பெறுவார். ஆளும்தரப்பினரின் விமர்சனம் அர்த்தமற்றது.
ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை தேர்தலில் முன்னிலையாக போவதில்லை. தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு பல அரசியில் கட்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளன. நாம் அதனை விரைவில் அறிவிப்போம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.