ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து விலகிசென்றவர்களை மீண்டும் ஒன்றிணையுமாறு கட்சியின் பதவிநிலைகளில் இருந்து நீக்கப்பட்ட துமிந்த திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளதாவது” 30 ஆம் திகதி எமது பதவிநிலை பறிக்கப்பட்டது. இதனை நாம் நீதிமன்றம் ஊடாக வெற்றிகொண்டோம். அதேபோல் இன்றைய நாளில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையினை நாம் முன்னெடுத்து செல்வோம்.
கட்சியின் எதிர்காலம் தொடர்பிலேயெ நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.ஸ்ரீலங்கா சுதந்திர்கட்சி புதிய பயணத்தை ஆரம்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. நாம் கட்சி உறுப்பினர்களிடம் ஒரு கோரிக்கையினை முன்வைக்கின்றோம். கட்சிக்குள் உள்ள குறைபாடுகள் தொடர்பாக நாம் இனியும் பேசமாட்டோம்.
இச்சந்தர்ப்பத்தில் கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றிணையுமாறு கோரிக்கை விடுக்கின்றோம். அதேபோல்க கட்சியில் இருந்து விலகிச்சென்றவர்கள் மனஸ்தாபங்களை கலைந்து மீண்டும் இணையுமாறு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.
ஏனென்றால்இது உங்களின் தாய்வீடு. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பலப்படுத்துவதற்காக உழைத்தவர்கள் பலர் உள்ளனர். நாம் அரசியல்பழிவாங்கலை மேற்கொள்ளமாட்டோம். மைத்ரிபால சிறிசேனவுக்கு ஆதரவானவர்களாக இருந்தாலும் சரி எம்முடன் இணையுமாறு கோருகின்றேன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பலப்படுத்தவும் கட்சி உறுப்பினர்களையும் பாதுகாக்கவும் நாம் தயாராகவே உள்ளோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.