உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மே மாத ஆரம்பத்தில் பரீட்சை நடாத்துவதற்கு முன்னர் வழங்குவதற்கு முயற்சிப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்
இதேவேளை க.பொ.த சாதாரண தர பரீட்சையை மே மாத நடுப்பகுதியில் நடத்துவதற்கான பரீட்சை அட்டவணைகள் ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அத்துடன் விடைத்தாள் தேர்வாளர்களின் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள கூட்டுக் குழுவின் அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அது தொடர்பான அனுமதியை அடுத்த சில வாரங்களில் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இவ்வருடம் முதலில் ஜனாதிபதித் தேர்தலே நடைபெறும் எனவும் குறிப்பிட்டார்.