முன்னாள் அமைச்சர் சனத் நிஷாந்தவின் வீடு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஹலவத்தை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட 68 சந்தேக நபர்களை விடுதலை செய்ய ஹலவத்தை நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
குறித்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் சாட்சிகள் இருவர் உயிரிழந்தமை மற்றும் பொலிசார் சாட்சியங்களை நீதிமன்றில் முன்வைக்க தவறியதன் காரணமாக சந்தேக நபர்களை விடுதலை செய்ய நீதிமன்றம் தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.















