ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது
இந்த கலந்துரையாடல் நேற்று கொழும்பில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதில் எதிர்வரும் அரசியல் நடவடிக்கைகள் மற்றும் தேர்தல்கள் தொடர்பில் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
மேலும் பசில் ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இதற்கு முன்னர் இரண்டு சந்திப்புகளை நடத்தியிருந்தனர், அங்கு எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பான பல முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.