தேசிய புதிய அரிசித் திருவிழா இன்று முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அனுராதபுரத்தின் இடம்பெற்றது.
பாரம்பரியமாக பெரும் போகத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லின் முதற் பகுதியை ஜய ஸ்ரீ மஹாபோதிக்கு காணிக்கையாக செலுத்தும் வருடாந்த புத்தரிசி விழா, ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது.
மன்னர் காலத்தில் இருந்து நடைபெற்று வரும் இந்த சம்பிரதாயத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து அதிகளவான விவசாயிகள் ஒன்றிணைந்து விளைநிலங்கள் செழிக்க வேண்டியும், விவசாயத்தில் நாடு தன்னிறைவு அடைந்து வளமான பொருளாதாரம் ஏற்பட வேண்டியும் பிரார்த்தனை செய்தனர்.
மகா சங்கத்தினரின் பிரித் பாராயனத்துக்கு மத்தியில் தங்கப் பாத்திரத்தில் அரிசியை நிரப்பும் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொண்டார்.
தேசிய புத்தரிசி விழாவின் நினைவுப் பதிப்பும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.