நாட்டிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக இந்தியாவிற்கு படகில் கடத்தி செல்லப்பட்ட சுமார் 5 கிலோ நிறையுடைய தங்க கட்டிகள் இந்திய மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகனால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த 04ஆம் திகதி அதிகாலை இலங்கையிலிருந்து தங்கம் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்திருந்தாக இந்திய மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அமைந்துள்ள முயல் தீவுக்கும் மணாலி தீவுக்கும் இடையே உள்ள கடல் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முற்றுகையிட்டபோது பொதி ஒன்றை கடலில் வீசிவிட்டு சந்தேக நபர்கள் தப்பி செல்வதற்கு முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து கடலில் வீசப்பட்ட தங்கத்தை தேடும் பணிகளை இந்திய மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் முன்னெடுத்த நிலையில் நேற்று மாலை தங்கம் மீட்கப்பட்டுள்ளது.
இதன் இந்திய மதிப்பு சுமார் 3 கோடி ரூபா என இந்திய மத்திய வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.