”அதிகரிக்கப்பட்ட அரச ஊழியர்களின் சம்பளத்தை புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக” நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyamabalapitiya) தெரிவித்துள்ளார்.
கேகாலையில்(Kegalle) நேற்றையதினம்(07) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” அரச ஊழியர்களின் நலன் கருதி சம்பளத்துடன் 10,000 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அதிகரிக்கப்பட்ட புதிய சம்பளத்தை 08ஆம்(இன்று) திகதி முதல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் அதிகரிக்கப்பட்ட தொகை மாத்திரம் 13 பில்லியன் ரூபாயை அண்மித்துள்ளது ” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ், சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு அரச ஊழியர்களின் ஏப்ரல் மாதத்திற்கான சம்பளம் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என்று நிதியமைச்சு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.