ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வுக்கான பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான குழுவின் தலைவராக இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வுக்கான பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான குழுவின் முதலாவது கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அங்கு இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி. ரட்நாயக்கா இந்த பிரேரணையை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த குழுவின் தலைர் தாரக பாலசூரிய பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான குழுவின் நோக்கமும், பொது நிறுவனங்களுக்கான குழுவின் நோக்கமும் ஒன்றே என்று அந்த நோக்கங்களை மாற்ற வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியிருந்தார்.