நுகர்வோர் அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் காலாவதியான அழகுசாதனப் பொருட்கள் மற்றும் குழந்தைகளின் சுகாதாரப் பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இவை அதுரிகிரிய பிரதேசத்தில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இதன் பெறுமதி 50 இலட்சம் ரூபா என நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் தொடர்பான விசாரணையின் போது இது தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்டதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
மேலும் உறுதிப்படுத்தப்பட்ட தகவலின்படி, விசேட தள்ளுபடியுடன் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்ட காலாவதியான பொருட்களின் இருப்பு காணப்பட்டதுடன், இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.