மேற்கு ரஷ்யாவில் ரயில் பாதையில் பாலமொன்று இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் புகையிரத சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதோடு, சுமார் 8,000 வீடுகளுக்கு எரிவாயு விநியோகமும் தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படாமையே குறித்த பாலம் இடிந்து விழுந்தமைக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.