பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களை நியாயமான விலையில் மக்கள் கொள்வனவு செய்யும் வகையில் ஒன்பது அத்தியாவசியப் பொருட்களுக்கு விலைக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.
அதன்படி, ஒரு கிலோ கோதுமை மா 189 ரூபாய் முதல் 208 ரூபாய் வரையிலும், பருப்பு 312 ரூபாய் முதல் 327 ரூபாய் வரையிலும் விலைக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு ஒரு கிலோ 174 ரூபாய் முதல் 214 ரூபாய் வரையிலும், சீன வெங்காயம் ஒரு கிலோ 298 ரூபாய் முதல் 328 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ சின்ன வெங்காயம் 349 ரூபாய் முதல் 384 ரூபாய் வரையும் தாய்லாந்து உலர் நெத்தலி கிலோ ஒன்று 869 முதல் 955 ரூபாய் வரையிலும் காய்ந்த மிளகாய் 818 ரூபாய் முதல் 859 வரையும் விற்பனை செய்யப்பட வேண்டும் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை மேலும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.