தேசிய மக்கள் சக்தி பகிரங்க விவாதத்திற்குத் தயாரில்லை என்ற விடயம் தற்போது தெளிவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தேர்தல் தொடர்பில் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் நாம் நேரடி விவாதத்தில் பங்கேற்க தயாராகவே உள்ளோம்.
நேரடி விவாதத்திற்கு வருமாறு தேசிய மக்கள் சக்திக்கு பகிரங்க சவால் விடுத்திருந்தோம்.
தேசிய மக்கள் சக்தி அதற்குத் தயாரில்லை என்ற விடயம் தற்போது தெளிவாகின்றது.
நாட்டைப் பொறுப்பேற்க ஆசைப்படும் அனுரகுமாரவிடம் அபிவிருத்தி தொடர்பான பொருளாதார கொள்கை திட்டங்கள் இல்லை.
எனவே மக்கள் இந்த இடத்தில் தெளிவாக சிந்தித்து தீர்மானம் எடுக்க வேண்டும்.
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான வேலைத்திட்டங்கள் ஐக்கிய மக்கள் சக்தியிடமே காணப்படுகின்றது” என நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார்.