தரமற்ற தடுப்பூசி மோசடி தொடர்பான வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவின் பிணை கோரிக்கை மாளிகாகந்த நீதிமன்றால் இன்று (புதன்கிழமை) நிராகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பிணை கோரிக்கையை நிராகரித்து, விசாரணை முடியும் வரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் லொச்சனி அபேவிக்ரம தெரிவித்தார்.
மேலும் சர்ச்சைக்குரிய மனித இம்யூனோகுளோபுலின் விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டுகள் காரணமாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மார்ச் 01ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.