காங்கிரஸ் கட்சியையும், இந்தியா கூட்டணியையும், இந்தியாவை உடைக்கவே வடக்கு-தெற்கு பிரிவினையை உருவாக்குவதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றஞ்சாட்டியுள்ளார்.
பீகார் மாநிலத்தில், கயா மாவட்டத்தின் குராரு பகுதியில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
காங்கிரஸ் கட்சியும், ராஷ்ட்ரீய ஜனதாதளமும் திருப்திபடுத்தும் அரசியலில் ஈடுபட்டுள்ளன. அதனால்தான் காங்கிரசுக்கு சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்யும் 370 ஆவது சட்டப்பிரிவை நீக்கியதற்கு எதிர்ப்பு எதிர்த்து வருகின்றன.
ஆனால், இந்தியாவை உடைக்கவே வடக்கு-தெற்கு பிரிவினையை உருவாக்குவதற்கு காங்கிரஸ் முயற்சிக்கிறது. அதன் தலைவர் ராகுல் காந்தியும் இந்த விவகாரத்தில் மௌனம் காக்கின்றார்.
ஆனால் காங்கிரசின் இந்த திட்டத்தை தேசிய ஜனநாயக கூட்டணியும், நாட்டு மக்களும் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள்.
அத்துடன் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 400 க்கு அதிகமான இடங்களை உறுதி செய்வார்கள்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவதை காங்கிரஸ் ஒருபோதும் விரும்பவில்லை. பீகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா வழங்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் தெரிவித்தார்.