கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகத்தில் செயற்படுவதற்காக 8.4 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உயர் தொழில்நுட்ப ஸ்கேனிங் இயந்திரங்கள் ஜப்பானிய அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் (Mishukoshi Hideaki அவர்கள் முதல் தொகுதி உபகரணங்களை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் கையளித்துள்ளார்
இந்த ஸ்கேனிங் இயந்திரங்கள் மூலம் பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் தொற்றுநோய்கள், தொற்று நோய்கள் போன்ற நோய்கள் கண்காணிக்கப்படவுள்ளது
அத்துடன் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM) செயல்படுத்தியுள்ள இந்தத் திட்டத்தின் கீழ், நோய்களைக் கண்டறியும் ஸ்கேனர்கள், முழு உடல் ஸ்கேனர்கள், வெளிநாட்டு கடவுசீட்டுக்கான ஸ்கேனர்கள் மற்றும் பயோமெட்ரிக் அணுகல் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
இது தவிர கட்டுநாயக்க விமான நிலையத்தில் 150 அலகுகளைக் கொண்ட ஸ்மார்ட் மலசலகூட அமைப்பையும் இந்த திட்டம் நிறுவவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.