நெடுந்தீவு பிரதேசத்தில் சுற்றுலாத்துறையை விருத்தி செய்தல் மற்றும் பிரதேசத்தின் உட்கட்கமைப்பு வசதிகளை மேம்படுத்தல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டது.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில், இவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்படும் வேலைத் திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.
பிரதேசத்தின் முன்னேற்றத்திற்கு அத்தியாவசியமான கடல் போக்குவரத்து, வீதிப் போக்குவரத்து, விவசாயம், கடற்றொழில், கால்நடை அபிவிருத்தி, நீர்பாசனம், உட்பட பல்வேறு விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டன.
இதன்போது கருத்து தெரிவித்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நெடுந்தீவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று நிலைமைகளையும் மக்களின் எதிர்பார்ப்புக்களையும் அறிந்து கொண்டதாகத் தெரிவித்தார். மேலும், ஜனாதிபதியுடன் கலந்துரையாடி நெடுந்தீவிற்கான விசேட நிதி ஒதுக்கீட்டினை பெற்றுக் கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.