ஐசிசி மகளிர் இருபதுக்கு 20 உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிக்கான மகளிர் அணியை இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
அதன்படி சாமரி அத்தபத்து தலைமையிலான 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது
விஷ்மி குணரத்ன, நிலக்ஷி டி சில்வா, ஹர்ஷிதா சமரவிக்ரம, கவீஷா தில்ஹாரி, ஹசினி பெரேரா மற்றும் அனுஷ்கா சஞ்சீவனி ஆகியோர் குழாமில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும், உதேஷிகா பிரபோதனி, இனோகா ரணவீர, அச்சினி குலசூரிய, ஹன்சிமா கருணாரத்ன, காவ்யா காவிந்தி, இனோஷி பெர்னாண்டோ, சுகந்திகா குமாரி மற்றும் சஷினி ஜும்னி ஆகியோரும் தகுதிச் சுற்றுப்போட்டியில் பங்குபற்றவுள்ள அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இதேவேளை ஐசிசி மகளிர் டுவென்டி 20 உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்று அபுதாபியில் மே 25 முதல் மே 7 வரை நடைபெறுகிறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.