பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பில் அறிந்திராத ஒருவர் இந்த நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் நாட்டின் நிலை கேள்விக்குறியாகும்” என ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் இன்று பாரிய பிரச்சினை எழுந்துள்ளது. கட்சிக்குள் இருந்து எதனையும் செய்யமுடியாது என்பதனாலேயே நாம் முன்கூட்டியே கட்சியில் இருந்து வெளியேறினோம்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு உத்தியோகப்பூர்வை அறிவிப்பை வெளியிடுவோம்.
இன்று ஜனாதிபதி தேர்தலில் பலர் போட்டியிட விரும்புகின்றனர். ஆனால் பொருளாதார வேலைத்திட்டம் தொடர்பில் அறிந்திராத ஒருவர் இந்த நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் நாட்டின் நிலை என்னவாகும் என்பதை அனைவரும் அறிவர்” இவ்வாறு அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.