கண்டி – தெல்தெனிய, கும்புக்கந்துர பகுதியில் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர்.
திஹாரிய பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட இளம் தம்பதியினர் தெல்தெனிய பகுதியிலுள்ள தமது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த போது விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்றுள்ளனர் எனவும் அங்கு எதிர்பாராத விதமாக அவர்கள் நீரில் மூழ்கியுள்ளனர் எனவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த தம்பதியை காப்பாற்றுவதற்காக நீர்த்தேக்கத்தில் குதித்த திகனை – அளுத்வெல்ல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபரொருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.