சேதம் அடைந்த 31 சொகுசு பேருந்துக்கள் புனரமைக்கப்பட்டு நெடுஞ்சாலையில் இயங்குவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பணிப்பாளர் குஷான் வகொடோபொல தெரிவித்துள்ளார்
அத்துடன் மொரட்டுவை, கட்டுபெத்த டிப்போவில் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக பாழடைந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மேலும் 30 சொகுசு பேருந்துகள் அடுத்த மூன்று மாதங்களில் புனரமைக்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் பணிப்பாளர் தெரிவித்தார்.
பொதுநலவாய மாநாட்டிற்காக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட சொகுசு பேருந்துக்கள் பல்வேறு தொழில்நுட்ப கோளாறு காரணமாக மொரட்டுவை, கட்டுபெத்த உள்ளிட்ட பல டிப்போக்களில் பல வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
முன்னதாக, அதிவேக நெடுஞ்சாலையில் 17 சொகுசு பேருந்துக்கள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அது 48 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.