யாழில் இளைஞர் ஒருவர் தனது காதலியையும் , காதலியின் தாயையும் கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தனது உயிரையும் மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு , பணிப்புலம் பகுதியில் இன்று அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காதலர்களுக்கு இடையே கடந்த சில நாட்களாக நிலவி வந்த முரண்பாடே இத்தாக்குதலுக்குக் காரணமெனத் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் படுகாயமடைந்த தாயும் மகளும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தப்பிச் சென்ற இளைஞன் காணி ஒன்றில் இருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்த மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.