தென்மேற்கு பாகிஸ்தானில் பெய்த கனமழை மற்றும் மின்னல் தாக்கியதில் 39 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.
இறந்தவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள் என்றும், அறுவடை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன் கனமழை காரணமாக ஏராளமான விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்துடன் மின்சார விநியோகம் மற்றும் போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் 2022 ஆம் ஆண்டில், பாகிஸ்தானை பாதித்த வெள்ளத்தால் ஏற்பட்ட விபத்துக்களால் 1700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.